This Article is From Sep 03, 2019

வெளிநாடு சென்ற முதல்வர், பொறுப்பை ஒப்படைக்காமல் சென்றது ஏன்..?- ஓ.பன்னீர்செல்வம் (OPS) பதில்

முதல்வர், இதைப் போன்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவரின் பொறுப்புகளை துணை முதல்வருக்கோ அல்லது மூத்த அமைச்சரிடத்திலோ ஒப்படைத்து விட்டுச் செல்வது வழக்கம்.

Advertisement
தமிழ்நாடு Written by

எடப்பாடி பழனிசாமி, யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை. மாறாக, அரசு அதிகாரிகளை தன்னுடனேயே அழைத்துச் சென்றார். 

தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் கடந்த ஆகஸ்ட் 28-ம்தேதி தொடங்கியது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

மேலும், முதல்வர், இதைப் போன்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவரின் பொறுப்புகளை துணை முதல்வருக்கோ அல்லது மூத்த அமைச்சரிடத்திலோ ஒப்படைத்து விட்டுச் செல்வது வழக்கம். ஆனால், எடப்பாடி பழனிசாமி, யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை. மாறாக, அரசு அதிகாரிகளை தன்னுடனேயே அழைத்துச் சென்றார். 

அதிமுக-வில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் சரியான நட்புறவு இருக்கவில்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானது. இது குறித்து பன்னீர்செல்வமோ அல்லது பழனிசாமியோ இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தனர். 

Advertisement

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்த ஓ.பி.எஸ்-ஸிடம் அதற்கு விளக்கம் கேட்கப்பட்டது. “முதல்வர், தனது பொறுப்புகளை இன்னொருவருக்குக் கொடுப்பது என்பது அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதில் தலையிட முடியாது” என்று சொல்லவிட்டு நடையைக் கட்டினார் ஓ.பி.எஸ். 

முன்னதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வரின் பயணம் குறித்து கேள்வியெழுப்பி, “எடப்பாடி பழனிசாமி எதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார். 

Advertisement


 

Advertisement