Read in English
This Article is From Mar 01, 2019

தலை சுற்றும் 'ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு' விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் கோடுகள் சுற்றுவது இல்லை. நம் மூளையின் நியூரானில் ஏற்படும் மில்லிவினாடி இடைவேளை தான் அவை சுற்றுவது போல் காட்டுகிறது

Advertisement
விசித்திரம் Edited by

இந்த ஒளியியல் மாயை குறித்தான கேள்விக்குத்தான் விஞ்ஞானிகள் விடையளித்துள்ளனர்

ஒளியியல் மாயை (Optical Illusion) என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி வெகு நாட்களாக இணையத்தில் பரவி வரும் ஒரு ஒளியியல் மாயை எப்படி வேலை செய்கிறது என்பதையும் பொதுவாக ஒளியியல் மாயை எப்படி வேலை செய்கிறது என்பதையும் தற்போது விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

பின்னா – ப்ரேல்ஸ்டாப் என்னும் அந்த ஒளியியல் மாயை, நடுவே இருக்கும் புள்ளியை சுற்றி, டைமண்ட் வடிவத்தில் கட்டங்கள் இருக்கும். நடுவே இருக்கும் புள்ளியை உற்று நோக்கினால், கட்டங்கள் கடிகார திசையில் சுற்றுவது தெரியும். அதுவே, முகத்தைப் புள்ளியிலிருந்து தூர எடுத்துச் சென்றால், எதிர் கடிகார திசையில் கட்டங்கள் சுற்றும்.

நீங்கள் முயற்சித்து பார்க்கவும்

 

Advertisement

சீனாவைச் சேர்ந்த அறிவியல் துறை வல்லுநர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், சில ஒளியியல் மாயை பார்க்கும் போது, மூளையில் சில நேர இடைவேளை ஏற்படும். அந்த இடைவேளை 15 மில்லிவினாடி எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உண்மையில் இந்த புகைப்படத்தில் இருக்கும் கட்டங்கள் சுற்றுவது இல்லை. நம் மூளையின் நியூரானில் ஏற்படும் மில்லிவினாடி இடைவேளை தான் அவை சுற்றுவது போல் தெரிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisement

 

Advertisement