Read in English
This Article is From Aug 13, 2018

இறந்த குட்டியோடு 17 நாட்கள் கடலுக்குள் சுற்றித் திரிந்த திமிங்கலம்!

திமிங்கலத்தின் இந்த பாசப் போராட்டத்தை கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
விசித்திரம் (c) 2018 The Washington Post

அமெரிக்கா வாஷிங்டன் நகரில் உள்ள கடல்வாழ் உயிரின ஆய்வகத்தில், சமீபத்தில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்த சில நாட்களிலேயே, குட்டித் திமிங்கலம் உயிரிழந்துள்ளது. இதனால் சோகமடைந்த தாய் திமிங்கலம், இறந்த குட்டியை சுமந்தபடி 17 நாட்கள் கடலுக்குள் வாழ்ந்து வந்துள்ளது.

இது குறித்து ஆய்வு செய்த, கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், ஓர்கா வகையை சேர்ந்த இந்த திமிங்கலம், 1600 கிலோ மீட்டர் தூரம் குட்டியை சுமந்தபடி நீந்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 17 நாட்களாக, தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டத்தை கண்டு, ஆராய்ச்சியாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதனால், தாய் திமிங்கலங்கத்தின் ஆரோக்கியத்தில் பலவீனம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

17 நாட்களுக்கு பிறகு, இறந்த குட்டியை விடுத்துள்ளது தாய் திமிங்கலம். திமிங்கலத்தின் இந்த பாசப் போராட்டத்தை கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement