This Article is From May 22, 2020

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிப்பு!

ஜெயலலிதா மறையும் வரை வேதா நிலையத்தில்தான் வாழ்ந்து வந்தார்

Advertisement
தமிழ்நாடு Written by

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் வேதா நிலையம் பற்றிய சர்ச்சை வெடித்தது

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில் ‘வேதா நிலையம்' என்கிற வீட்டில் வாழ்ந்து வந்தார். 2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலிலதா. இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இயற்கை எய்தினார் ஜெயலலிதா. 

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, ‘வேதா நிலையத்தை' நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. பல மாதங்களாகவே இதற்கு உண்டான பணிகளை செய்தது வந்தது அதிமுக தரப்பு. 

இந்நிலையில், வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது குறித்த அரசாணை இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

முன்னதாக ஜெயலலிதாவின் சொத்துகள் தங்களுக்கே சொந்தமென்று அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா பிரச்னை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement