2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் ஆகியவை, உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 73 இடங்களைக் கைப்பற்றின
ஹைலைட்ஸ்
- பாஜக, இந்த முறை உ.பி-யில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது
- காங்கிரஸ், இந்த முறையும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளது
- வரும் 23 ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்
New Delhi: இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அவர்களின் கூட்டணி, இந்த முறை தேர்தல் முடிவுகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜகதான் உத்தர பிரதேசத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன.
கருத்துக் கணிப்புகள், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 49 இடங்களில் வெற்றி பெறும் என்றும், மாயாவதி- அகிலேஷ் கூட்டணி 29 இடங்களில் வெற்றியடையும் என்றும் கணித்துள்ளன.
டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக் கணிப்பு, உத்தர பிரதேசத்தில் பாஜக, 58 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுகிறது. ரிபப்ளிக்- ஜன் கி பாத், பாஜக 57 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கிறது. ஆனால் ஏபிபி நியூஸ்- நீல்சன் அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பு, பாஜக, 22 இடங்களில் மட்டுமே வெற்றியடைய வாய்ப்புள்ளது என்றுள்ளது.
ஓர் செய்தி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலமுறை தவறானவையாக இருந்துள்ளன.
2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் ஆகியவை, உத்தர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில் 73 இடங்களைக் கைப்பற்றின. சமாஜ்வாடி 5 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் பிடித்தன.
இந்த முறை காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேசத்தை கவனித்துக் கொள்ள பிரியங்கா காந்தி வத்ரா களமிறக்கப்பட்டார். அவர் அங்கு தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட போதும், அது வெற்றியாக மாற வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்புகள் குறித்து பாஜக-வின் தேசிய துணைத் தலைவர் வினய் சகாசரபுதே, “நாங்கள் என்ன முடிவுகள் வரும் என்று நினைத்தோமோ, அதைத்தான் பெரும்பான்மையான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. உத்தர பிரதேசத்தில் மகா கூட்டணி தோல்வியடைந்துள்ளதையே இது காட்டுகிறது” என்றார்.
மே 23 ஆம் தேதி, தேர்தல் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள NDTV தளத்தை பின்தொடரவும்.