This Article is From Mar 05, 2019

‘மீண்டும் பொய்… வெட்கமாயில்லை..!’- பிரதமர் மோடியை தெறிக்கவிட்ட ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று உத்தர பிரதேசத்தில் இருக்கும் அமேதிக்குச் சென்று, ‘ஏகே-203’ துப்பாக்கிகளை தயாரிக்கும் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார்.

‘மீண்டும் பொய்… வெட்கமாயில்லை..!’- பிரதமர் மோடியை தெறிக்கவிட்ட ராகுல்

அமேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குச் சொந்தமான தொகுதி என்பதால், மோடி, ராகுலை சரமாரியாக விமர்சித்தார்

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று உத்தர பிரதேசத்தில் இருக்கும் அமேதிக்குச் சென்று, ‘ஏகே-203' துப்பாக்கிகளை தயாரிக்கும் தயாரிப்பு ஆலையை திறந்து வைத்தார். இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குச் சொந்தமான தொகுதி என்பதால், மோடி, ராகுலை சரமாரியாக விமர்சித்தார். அதற்கு, தற்போது பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது உரையாற்றிய மோடி, ‘என் தலைமையிலான அரசு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதற்கு மிகச் சிறந்து உதாரணமாக அமேதி இருக்கும். இனி அமேதியின் புதிய அடையாளம் ஏகே-203 ஆக இருக்கும். ரஷ்யாவுடன் கூட்டு ஒப்பந்தப்படி இந்த துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். நக்சல்கள் மற்றும் தீவிரவாதிகளை எதிர்த்து போர் புரிய இங்கு தயாரிக்கும் துப்பாக்கிகள் பயன்படும்.

vgskndcg

2010 ஆம் ஆண்டு உங்கள் எம்.பி. இந்தத் தயாரிப்பு ஆலைக்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது அவரது கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆனால், ஆலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரைப் போன்ற ஒரு நபரை ஏன் நம்புகிறீர்கள்' என்றார்.

இதற்கு ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு நான்தான் 2010 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினேன். அப்போதிலிருந்து சில சிறிய ரக ஆயுதங்கள் அங்கு தயாரிக்கப்பட்டுத்தான் வருகின்றன. நேற்று நீங்கள் அமேதிக்குச் சென்று, உங்கள் வழக்கமான பொய்களை அவிழ்த்து விட்டிருக்கீறர்கள். உங்களுக்கு வெட்கமாகவே இருக்காது' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘ராகுல் காந்தி, ஒரு விஷயத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். நேற்று ரஷ்யாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஏகே 203 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. அமேதியின் வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர் என்பதால் இது உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது' என்று எதிர் கருத்து கூறியுள்ளார்.

.