இது குறித் நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 21 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
New Delhi: "நம்முடைய சட்டங்கள், சட்ட அமைப்பு, சமூகம் மற்றும் நமது மதிப்புகள்" ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படாததால், தன்பாலின தம்பதிகளுக்கு இடையிலான திருமணம் "அனுமதிக்கப்படவில்லை" என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
தன்பாலின திருமணங்கள் இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மனு இன்று தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பிலிருந்து ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்.ஜி) துஷர் மேத்தா, "நம்முடைய சட்டங்கள், சட்ட அமைப்பு, சமூகம் ஆகியவை தன்பாலின தம்பதிகளுக்கு இடையிலான ஒரு திருமணத்தை ஒரு சடங்காக அங்கீகரிக்கவில்லை" என்று இந்த திருமண முறைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
அத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்க அல்லது அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு காரணங்களுக்காக "அனுமதிக்கப்படாது" என்று அவர் கூறினார் - முதலாவதாக, மனு நீதிமன்றத்தை சட்டமியற்றுமாறு கேட்டுக் கொண்டது, இரண்டாவதாக, எந்தவொரு நிவாரணமும் வழங்கப்பட்டால் "பல்வேறு சட்டரீதியான விதிகளுக்கு மாறாக இயங்கும்".
மேத்தா மேலும் கூறுகையில், இந்து திருமண சட்டத்தின் கீழ், திருமணங்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு விதிகள் அல்லது தடைசெய்யப்பட்ட உறவுகள் கணவன் மற்றும் மனைவியைப் பற்றி பேசுகின்றன, எனவே, ஒரே பாலின தம்பதியர் சம்பந்தப்பட்ட இடத்தில் இந்த பாத்திரங்கள் யாருக்கு வழங்கப்படும் என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இது குறித் நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 21 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)