This Article is From Dec 24, 2018

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

லண்டனில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு தேசிய பொறுப்பாண்மை நீதிமன்றம் 7 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

நவாஸ் ஷெரிப்பால் வருமானத்திற்கான ஆதாரத்தை நிரூபிக்க முடியவில்லை.

Islamabad:

லண்டனில் உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு தேசிய பொறுப்பாண்மை நீதிமன்றம் 7 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதுகுறுத்து ஷெரீப் கூறும்போது, தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றார்.

முன்னதாக, ஊழல் செய்து சேர்த்த பணத்தில் லண்டன் மாநகரில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்த வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.

3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பால், சவுதி அரேபியாவில் தான் உரிமை வகிக்கும் ஆலையில் இருந்து பெற்ற வருமானத்தால் வாங்கியது என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.