நான்கு ஃபெர்ராரில் தன் வேனை மோதிய லின் (Representative Image)
கடும் வேலை களைப்பில் நான்கு ஃபெராரி கார்கள் மீது தன் வேனை மோதிய டெலிவரி வேலை செய்பவர்க்கு 12 மில்லியன் டைவான் டாலர் ( சுமார் 2.8 கோடி) பில்லை அனுப்பி அதிர்ச்சி அளித்துள்ளனர். டைவனை சேர்ந்த லின் சின் என்னும் வாலிபர் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று, கார் ஓட்டும் போதே தூங்கி விட்டார். அவரது கார் அங்கு நின்றுக் கொண்டிருந்த 50 மில்லியன் டைவான் டாலர் மதிப்பிலான நான்கு ஃபெராரி கார்கள் மீது மோதியது. அதற்கு தான் இழப்பீடாக 2.8 கோடி பில் கொடுத்துள்ளனர்.
BBCயின் செய்தியில் லின்னின் குடும்பத்திற்கு சொந்தமாக இன்சென்செஸ் ( incense ) பேப்பர் விற்கும் கடை உண்டு. லின்னின் தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில், லின் கடையை பார்த்துக்கொள்ள தன் தாய்க்கு உதவியாக இருக்க தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். கடையை பார்த்து கொள்வதோடு ஒரு உணவகத்தில் டெலிவேரி பாய் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஞாயிறு அன்று தன் இரவு டெலிவேரி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய லின், தன் தாய் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதை பார்த்து தாய்க்கு உதவ எண்ணி, கோவில் நிகழ்ச்சிக்கான டெலிவேரியை நேரத்திற்கு கொண்டு சேர்த்தார். அதன் பின் வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் தான் அவர் கார் ஓட்டும் போதே தூங்கி விட்டார். காலை 5.40 போல் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
ABC நியூஸ்ஸில், இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இரண்டு ஃபெராரி கார்களின் சேதம் அதிகம். லின் ஓட்டி சென்ற வேன் இன்சுரன்ஸ் செய்யபடாதது என தெரிவித்துள்ளனர்.
லின் மது அருந்தவில்லை என்றும் இதுவரை சாலை விதி மீறல்கள் எதுவும் செய்தது இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
12 மில்லியன் தைவான் டாலரை எப்படி சேமிப்பது என கவலையில் இருந்த போது, தைவான் மக்கள் பலரும் உதவி கரம் நீட்டிய வண்ணம் உள்ளனர்.
BBC யின் செய்தியில், பலர் நிதி உதவி அளித்து வருவதாகவும் லின்னின் கடைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
“உதவி கரம் அளித்த அனைவருக்கும் என் நன்றி. பலர் மத்திய தைவானில் இருந்து இங்கு வந்த உதவுகிறார்கள். அவர்கள் எங்கு நிதி அளிக்கலாம் எனவும் கேட்டு வருகின்றனர். நான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன். மேலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை விட்டு போக பல வருடங்கள் ஆகும்” என லின் BBC க்கு பேட்டி அளித்தார்.
லின்னுக்கு உதவ நினைப்பவர்கள், குறிப்பிட்ட அக்கவுண்ட்க்கு அனுப்பும் படி தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த அக்கவுண்ட்டில் இதுவரை 7.4 இலட்ச தைவான் டாலர் வந்துள்ளது.
Click for more
trending news