New Delhi: மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ (Central Bureau of Investigation)யில் ஆயித்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளது என்றும், அவை விரைவில் நிரப்பப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிபிஐயில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது-
CBI –யில் மொத்தம் 5 ஆயிரத்து 532 பணயிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 4 ஆயிரத்து 503 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஐயில் மொத்தம் ஆயிரத்து 29 காலிப் பணியிடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கு சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. Executive களப்பணியாற்றும் பிரிவில்தான்காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளன. இதற்கு 5 ஆயிரம்பேர் இருக்க வேண்டும் என அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது 4 ஆயிரத்து 140 பேர் உள்ளனர்.
சட்டத்துறை நிபுணர்கள் மொத்தம் 370 பேர் சிபிஐயில் இருக்க வேண்டும். இதில் தற்போது 296 பேர் மட்டுமே உள்ளனர். டெக்னிக்கல் அதிகாரிகள் மொத்தம் 162 பேர் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 67 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.