அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- அமெரிக்காவில் கொரோனா வைரஸூக்கு 154 பேர் உயிரிழப்பு
- வைரஸ் தொற்றுநோயக்கு 10,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வரும் நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும்
Washington: அமெரிக்காவில் நாவல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு 10,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் பராமரிக்கப்படும் ஒரு பதிவுகள் தெரிவிக்கின்றது.
இது சீனா, இத்தாலி, இரான், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. உலகளவில், 229,390 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 9,325 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பக் கால தாமதமாக இருந்த பின்னர் தற்போது இந்த சோதனைகளின் அளவை அதிகரித்ததால், வரும் நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என அமெரிக்கச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க் நகரில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க்கில் 2,900 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் கொரோனா தொற்றுக்கு சுமார் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று அந்நகர மேயர் பில் டி பிளாசியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு மருத்துவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் பரவிய கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.