This Article is From Oct 25, 2018

பிரசாத லட்டு சாப்பிட்ட 200 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய பிரதேசத்தில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட லட்டுவை சாப்பிட்ட பின்னர், வயிற்று கோளாறு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறிய 200 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பிரசாத லட்டு சாப்பிட்ட 200 பேர் மருத்துவமனையில் அனுமதி!

நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

Damoh (Madhya Pradesh):

மத்திய பிரதேசத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதனன்று இரவு நோயாளிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர், வயிற்று கோளாறு மற்றும் வாந்தி என்ற ஒரே காரணத்தை கூறினர்.

அந்த லட்டுவினை தாமோ சேர்ந்த பெண் ஒருவர் ஷரத் பூர்ணிமா பிரசாதமாக கொடுத்துள்ளார். அவர் ஒவ்வொரு வருடமும் அருகில் உள்ள கடையிலிருந்து பால்கோவாவினை வாங்கி லட்டு செய்வது வழக்கம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நானும் எனது குழந்தைகளும் அந்த லட்டுவினை வாங்கி சாப்பிட்டதும், வாந்தி எடுக்க ஆரம்பித்தோம் என்றார்.

நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு வந்த மக்கள் நோயாளிகள் அனைவரும் ஒரே அறிகுறிகளை கூறினார்கள். இதற்கு காரணம் உணவில் கலந்திருந்த விஷம் அல்லது தூய்மையற்ற முறையில் பால்கோவா தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர் அமித் பிரகாஷ் ஜெயின் கூறினார்.

.