"ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் தாவிர உன்னி கலைமான்கள். அது மடிந்து போனால், அந்த இடமே வேறு விதமாக மாறக்கூடும்”
Oslo: நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் என்ற இடத்தில் சுமார் 200-க்கும் அதிகமான கலைமான்கள் செத்து மடிந்துள்ளன. பசியால் கலைமான்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேரழிவுக்குக் காரணம் பருவநிலை மாற்றம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நார்வேயின் போலார் இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆஷில்டு ஓன்விக் பெடர்சன், இது குறித்து கூறுகையில், “இவ்வளவு மிருகங்கள் ஒரே நேரத்தில் மடிந்து கிடப்பதைப் பார்க்க பயமாக இருக்கின்றது. பருவநிலை மாற்றம் எப்படி இயற்கையை பாதிக்கும் என்பதற்கு மிக மோசமான உதாரணமாக இது அமைந்துள்ளது. மிகவும் வருத்தமளிக்கிறது” என்று நொந்து கொள்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் ஸ்வால்பார்ட் பகுதியில் கடும் மழை பெய்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மிருகங்கள் உணவைத் தேட சிரமப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் கலைமான்கள் பட்டினி காரணமாக மடிந்துள்ளனவாம்.
“ஸ்வால்பார்டின் எல்லா பகுதிகளிலும் மேயக்கூடியவை கலைமான்கள். பனிக் காலத்தில் தங்களது உணவை தோண்டி சாப்பிடக் கூடியவை கலைமான்கள். பனியில் மட்டுமே அவைகளால் இப்படி செய்ய முடியுமே தவிர ஐஸ் தரையில் அல்ல” என்கிறார் பெடர்சன். இந்த காரணத்தினாலேயே கலைமான்கள் உணவைத் தேட சிரமப்பட்டு மாண்டிருக்கலாம் என்கிறார் பெடர்சன்.
பருவநிலையில் நிகழும் ஒரு சிறிய மாற்றமானது, வனவிலங்குகளின் வாழ்க்கையில் எப்படி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இன்னொரு ஆராய்ச்சியாளரான டோர்கில்ட் வேரா, “ஆர்க்டிக் பல்லுயிர்ச்சூழலில் மிகப் பெரிய பங்காற்றுகின்றன மான்கள். இந்த பல்லுயிர்ச்சூழல் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா வரை நீல்கிறது.
ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் தாவிர உன்னி கலைமான்கள். அது மடிந்து போனால், அந்த இடமே வேறு விதமாக மாறக்கூடும்” என்று எச்சரிக்கிறார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)