This Article is From Sep 07, 2019

200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயற்சி: அஜித் தோவால் எச்சரிக்கை

பெரும் அளவிலான ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன, தொடர்ந்து காஷ்மீரில் உள்ள மக்கள் பிரச்சனைகளை உருவாக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றனர் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கூறியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயற்சி: அஜித் தோவால் எச்சரிக்கை

எல்லைக்கோட்டு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • Pakistan is trying to stoke violence in the region, Ajit Doval said
  • About 230 terrorists trying to infiltrate into Kashmir, he said
  • The number is based on radio intercepts and intelligence from ground
New Delhi:

பாகிஸ்தானில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கூறியுள்ளார். 

முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. 

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை பார்வையிட சென்ற அரசியல் தலைவர்கள் பலரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் விதிகப்பட்ட கடும் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கூறும்போது, சுமார் 230 பயங்கரவாதிகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர்.

இந்த எண்ணிக்கை வானொலி இடைமறிப்பு மற்றும் களத்தில் உள்ள உளவுத்துறை அளித்த தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். மேலும், ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சில பயங்கரவாதிகள் ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் பிடிபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதேபோல், பெரும் அளவிலான ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன, தொடர்ந்து காஷ்மீரில் உள்ள மக்கள் பிரச்சனைகளை உருவாக்க வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து காஷ்மீரிகளின் வாழ்வை பாதுகாக்க தீர்மானித்து உள்ளோம். 

எல்லையில் உள்ள பாகிஸ்தானிய தொலைதொடர்பு டவர்களில் இருந்து, எப்படி அதிகளவில் ஆப்பிள் ஏற்றி கொண்டு லாரிகள் செல்கின்றன. அதனை தடுக்க முடியவில்லையா? உங்களுக்கு வளையல்களை அனுப்பி வைக்கவா? என்று இங்குள்ள அவர்களது ஆட்களுக்கு,

பாகிஸ்தான் தகவல்களை அனுப்ப முயற்சிப்பது இடைமறித்து கேட்கப்பட்டு உள்ளது. அமைதியை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் என்றும் தோவல் கூறியுள்ளார்.
 

.