கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 3000 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 564 படகுகளில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டிய நேரத்தில், மீனவர்களை நோக்கி வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் மிரட்டி, திரும்பிச் செல்ல மிரட்டினர் என்கிறார் இயந்திரப் படகு மீனவர் சங்க தலைவர் சேசுராஜ்.
இதனால் அனைத்து மீனவர்களும், மீன் பிடிக்காமல் திரும்பி வந்தாதகவும் அவர் கூறுகிறார். அதுமட்டும் இல்லாமல் 20 படகுகளின் வலைகளை அறுத்தெறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பல நாட்களாக நீடிக்கும் இந்த பிரச்சனை தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதே போன்று ஜூன் 28-ம் தேதி 2500 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்த போது விரட்டி அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)