বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 28, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியது!

India Coronavirus Cases: இதுவரை பாதிப்படைந்த 9,52,743 பேர் குணமடைந்துள்ளனர். 33,425 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

India coronavirus cases: வைரஸ் பாதிப்பு காரணமாக 33,425 பேர் உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,703 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14,83,156 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை பாதிப்படைந்த 9,52,743 பேர் குணமடைந்துள்ளனர். 33,425 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தொற்று நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மும்பை, நொய்டா, மற்றும் கொல்கத்தாவில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்களை திறந்து வைக்கும்போது மேற்குறிப்பிட்ட கருத்தினை தெரிவித்திருந்தார். மேலும், “கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மற்ற பெரிய நாடுகளை விட மிகக் குறைவு என்றும், மீட்பு விகிதம் பெரும்பாலான நாடுகளை விட சிறந்தது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்காக நாடு முழுவதும் ஐந்து இடங்கள் தயாராக உள்ளதாக உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ரேனு ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மிக வேகமாக பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக 50,000க்கும் மேலானவர்களுக்கு தினமும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 179 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை எட்டியுள்ளது. மே.19ம் தேதியில் 1 லட்சத்தை எட்டியிருந்தது இந்தியா. 

Advertisement

1.73 கோடி மாதிரிகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 5,28,082 மாதிரிகள் நேற்று ஒரே நாளில் சோதிக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிரா (7,924), தமிழ்நாடு (6,993), ஆந்திரா (6,051), கர்நாடகா (5,324), உத்தரபிரதேசம் (3,505) ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய வழக்குகளைப் பதிவு செய்துள்ளன என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

3,83,723 வழக்குகளுடன், மகாராஷ்டிரா இந்தியாவில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளது, அதனைத் தொடர்ந்து தமிழகம் (2.2 லட்சம்), டெல்லி (1.31 லட்சம்), ஆந்திரா (1.02 லட்சம்), கர்நாடகா (1.01 லட்சம்) மற்றும் உ.பி. (70,000) வழக்குகள்) பதிவாகியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்புடைய இறப்புகளைப் பதிவு செய்த ஐந்து மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிரா (227), தமிழ்நாடு (77), ஆந்திரா (75), கர்நாடகா (49) மற்றும் மேற்கு வங்கம் (35) உள்ளன.

Advertisement