This Article is From Jul 24, 2020

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 49,000 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 30,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனாவால் 49,000 பேர் பாதிப்பு!

Coronavirus Cases, India: வைரஸ் பாதிப்பால் 30,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

New Delhi:

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் கொரோனா வைரஸால் 49,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12,87,945 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பால் 30,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 740 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 45,720 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 1,129 பேர் உயிரிழந்தனர் 

ஜூலை 3ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை கடந்திருந்த நிலையில், கிட்டதட்ட மூன்று வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பானது. கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்த நிலையில், ஒரே வாரத்தில் புதிதாக 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரா (9,895), ஆந்திரா (7,998), தமிழகம் (6,472), கர்நாடகா (5,030) மற்றும் உத்தரபிரதேசம் (2,516) ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக அளவில் புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா (298), கர்நாடகா (97), தமிழகம் (88), ஆந்திரா (61) மற்றும் மேற்கு வங்கம் (34): உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிருந்து அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதுவரை சுமார் 8.17 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; மீட்பு விகிதமானது இன்று காலை 63.45 சதவீதமாக உள்ளது. 

சுமார் 1.54 கோடி மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சோதனையை அதிகரிக்க முயற்சிக்கும்போது அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் - 3,52,801 வரை நேற்று சோதனை செய்யப்பட்டன. இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ளது.

டெல்லி இதுவரை 1.27 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நகரத்தில் 1.09 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இது கொரோனா நிலைமையின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

தெலுங்கானாவில், சுகாதார அதிகாரி ஒருவர், சமூக பரவலைப் குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். "அடுத்த நான்கைந்து வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும், மேலும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது" என்று தெலுங்கானாவின் பொது சுகாதார இயக்குனர் ஜி.சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்டலா ராஜேந்தர் அதை மறுத்துள்ளார்.

உலகளவில், இதுவரை 1.54 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றுநோயின் மையப்பகுதியாக உள்ள அமெரிக்காவில், இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26.56 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

.