This Article is From Oct 21, 2018

துணை ராணுவ படை பிரிவுகளில் 61,000 காலி பணியிடங்கள் - உள்துறை அமைச்சகம் தகவல்

துணை ராணுவ படை பிரிவுகளில் பணி ஓய்வு, பணி நீக்கம், இறப்பு போன்ற காரணங்களால் அதிகப் பணியிடங்கள் உருவாகியுள்ளன

துணை ராணுவ படை பிரிவுகளில் 61,000 காலி பணியிடங்கள்  - உள்துறை அமைச்சகம் தகவல்

மத்திய துணை ராணுவ படையின் கீழ் ஆறு துணை ராணுவ படைகளில் 61.000 காலி பணியிடங்கள் உள்ளன.

New Delhi:

உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, மத்திய துணை ராணுவ படையில், 61,000 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய துணை ராணுவப் படையான, மத்திய பாதுகாப்பு படையில், 18,460 காலி பணியிடங்கள் உள்ளன. 2018ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, எல்லை பாதுகாப்பு படையில் 10,738 பணியிடங்கள் வீரர்களுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

துணை ராணுவ படை பிரிவுகளில் பணி ஓய்வு, பணி நீக்கம், இறப்பு போன்ற காரணங்களால் அதிகப் பணியிடங்கள் உருவாகியுள்ளன. இந்த காலிப் பணியிடங்கள், நேரடி தேர்ந்தெடுப்பு, பணி உயர்வு மூலம் நிரப்பப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்பு படையினர் இந்தோ - பாகிஸ்தான் மற்றும் இந்தோ - பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சாஸ்திரா சீமா பால் படையினர் இந்தோ - நேபாளம் மற்றும் இந்தோ - புடான் எல்லை பகுதிகில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் விமானநிலையம், தொழில்துறை நிறுவனங்கள் அமைவு, அரசு அலுவலகங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகிறது. இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட துணை ராணுவ படை வீரர்களின் எண்ணிக்கையானது 10 லட்சம் ஆகும்.

.