சுமார் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு போலீஸாருக்குப் பல மணி நேரம் பிடித்தது
Mumbai: மும்பையைச் (Mumbai) சேர்ந்த பிச்சைக்காரர் (Beggar) ஒருவரது வீட்டில் சுமார் 8.77 லட்ச ரூபாய்க்கு பல்வேறு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மும்பையின் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்த அந்த பிச்சைக்காரர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
மும்பையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கோவாந்தியில் வாழ்ந்து வந்த பிர்ஜு சந்திரா அசாத் என்பவர்தான் அந்த பிச்சைக்காரர். அவர் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து, ஒற்றை அறையுள்ள அவரது குடிசை வீட்டிற்குள் சென்றுள்ளது மும்பை போலீஸ். ஆனால், அவர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. காரணம், சுமார் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு அவர்களுக்குப் பல மணி நேரம் பிடித்தது.
தற்போதைக்கு வங்கிகளைத் தொடர்பு கொண்டுள்ள போலீஸ், வைப்பு நிதியை பத்திரமாக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி, அசாத், கோவாந்திக்கும் மங்குர்துக்கும் இடையிலான ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது, விபத்தில் சிக்கி இறந்துள்ளதாக போலீஸ் தரப்பு சொல்கிறது.
அசாத் இறந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டைக் கண்டறிந்த போலீஸ், அவரின் உறவனர்களை தேட ஆரம்பித்துள்ளது. அப்போதுதான், வீட்டிலேயே இருந்த ஆயிரக்கணக்கான நாணயங்களைக் கண்டறிந்துள்ளது காவல்துறை.
தற்போதைக்கு வங்கிகளைத் தொடர்பு கொண்டுள்ள போலீஸ், வைப்பு நிதியை பத்திரமாக வைத்திருக்கச் சொல்லியிருக்கிறது. அதேபோல பிடிபட்ட நாணயங்களையும் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீஸ். அசாத்தின் உறவனர்கள் அல்லது குடும்பத்தாரைத் கண்டறிந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் காவல்துறை தரப்பு.