இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 173 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
- தமிழகத்தில் மொத்தமாக 1,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து 1,101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் நேற்று புதியதாக 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 47 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையைத் தவிர மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற தமிழக மாவட்டங்களைப் பொறுத்துவரை நேற்று தொற்று எதுவும் ஏற்படவில்லை.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (28.04.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 15
மணலி - 1
மாதவரம் - 3
தண்டையார்பேட்டை - 66
ராயபுரம் - 158
திரு.வி.க நகர் - 94
அம்பத்தூர் - 15
அண்ணா நகர் - 53
தேனாம்பேட்டை - 56
கோடம்பாக்கம் - 54
வளசரவாக்கம் - 17
ஆலந்தூர் - 9
அடையாறு - 17
பெருங்குடி - 9
சோழிங்கநல்லூர் - 2
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1
ஏப்ரல் 28 ஆம் தேதி, காலை 10 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 570 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ராயபுரம் மற்றும் அம்பத்தூரில் மட்டும் அதிகபட்சமாக தலா 13 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 173 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 384 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.