This Article is From Jun 11, 2020

மண்டலவாரியாக தீவிரமடையும் தொற்று - சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம்!

ஜூன் 11 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 25,937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக தீவிரமடையும் தொற்று - சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,507 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் இதுவரை 258 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • தமிழகத்தில் இதுவரை 326 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • தமிழகத்தில் வட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்

தமிழகத்தில் நேற்று 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,392 பேர். ஒட்டுமொத்த அளவில் 36,841 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,008 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 19,333 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 17,179 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 326 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (10.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 972

மணலி - 383

மாதவரம் - 724

தண்டையார்ப்பேட்டை - 3,405

ராயபுரம் - 4,405

திரு.வி.க நகர் - 2,456

அம்பத்தூர் - 901

அண்ணா நகர் - 2,362

தேனாம்பேட்டை - 3,069

கோடம்பாக்கம் - 2,805

வளசரவாக்கம் - 1,170

ஆலந்தூர் - 521

 அடையாறு - 1,481

பெருங்குடி - 481

சோழிங்கநல்லூர் - 469

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 333

ஜூன் 11 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 25,937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,507 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 12,839 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 3,405 மற்றும் 3,069 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 383 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


 

.