இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13,698 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது
தமிழகத்தில் நேற்று 1,837 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,407 பேர். ஒட்டுமொத்த அளவில் 38,716 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,372 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 20,705 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 17,659 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 349 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (11.06.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 1,024
மணலி - 405
மாதவரம் - 747
தண்டையார்ப்பேட்டை - 3,584
ராயபுரம் - 4,584
திரு.வி.க நகர் - 2,550
அம்பத்தூர் - 949
அண்ணா நகர் - 2,571
தேனாம்பேட்டை - 3,291
கோடம்பாக்கம் - 2,966
வளசரவாக்கம் - 1,217
ஆலந்தூர் - 555
அடையாறு - 1,534
பெருங்குடி - 515
சோழிங்கநல்லூர் - 493
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 413
ஜூன் 12 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 27,398 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13,698 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 275 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,012 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,584பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 3,584 மற்றும் 3,291 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 405 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.