This Article is From Jun 18, 2020

சென்னையில் மண்டலவாரி கொரோனா தொற்று விவரம்: ஜூன் 18 ஆம் தேதி காலை நிலவரம் என்ன?

ஜூன் 18 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 35,556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலவாரி கொரோனா தொற்று விவரம்: ஜூன் 18 ஆம் தேதி காலை நிலவரம் என்ன?

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,027 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கொரோனா தொற்று 50,000ஐ தாண்டியுள்ளது
  • சென்னையில் கொரோனா தொற்று 35,000ஐ தாண்டியுள்ளது
  • தமிழகத்தில் சமீப நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் கூடி வருகிறது

தமிழகத்தில் நேற்று 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,276 பேர். ஒட்டுமொத்த அளவில் 50,193 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 842 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 27,624 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 21,990 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 576 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (17.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,324

மணலி - 503

மாதவரம் - 955

தண்டையார்பேட்டை - 4,549

ராயபுரம் - 5,626

திரு.வி.க நகர் - 3,160

அம்பத்தூர் - 1,243

அண்ணா நகர் - 3,636

தேனாம்பேட்டை - 4,334

கோடம்பாக்கம் - 3,801

வளசரவாக்கம் - 1,497

ஆலந்தூர் - 736

 அடையாறு - 2,069

பெருங்குடி - 684

சோழிங்கநல்லூர் - 677

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 762

ஜூன் 18 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 35,556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,027 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 461 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 16,067 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 4,549 மற்றும் 4,334 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 503 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 

.