This Article is From Jun 25, 2020

சென்னையில் கொரோனா தொற்று: ஜூன் 25ம் தேதி காலை நிலவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 5,531 மற்றும் 5,316 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 718 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (24.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,755

Advertisement

மணலி - 718

மாதவரம் - 1,383

Advertisement

தண்டையார்பேட்டை - 5,531

ராயபுரம் - 6,837

Advertisement

திரு.வி.க நகர் - 3,896

அம்பத்தூர் - 1,741

Advertisement

அண்ணா நகர் - 4,922

தேனாம்பேட்டை - 5,316

Advertisement

கோடம்பாக்கம் - 4,908

வளசரவாக்கம் - 1,957

ஆலந்தூர் – 1,124

 அடையாறு - 2,777

பெருங்குடி - 916

சோழிங்கநல்லூர் - 894

மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் - 1,139