இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28,823 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் நேற்று 46 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்
- இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 957 பேர் உயிரிழந்துள்ளனர்
- தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் நேற்று 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,956 பேர். ஒட்டுமொத்த அளவில் 74,622 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,358 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 41,357 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 32,305 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 957 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (26.06.2020) வருமாறு:
திருவொற்றியூர் - 1,912
மணலி - 798
மாதவரம் - 1,524
தண்டையார்பேட்டை - 5,989
ராயபுரம் - 7,211
திரு.வி.க நகர் - 4,132
அம்பத்தூர் - 1,982
அண்ணா நகர் - 5,397
தேனாம்பேட்டை - 5,655
கோடம்பாக்கம் - 5,316
வளசரவாக்கம் - 2,201
ஆலந்தூர் - 1,229
அடையாறு - 3,057
பெருங்குடி - 944
சோழிங்கநல்லூர் - 1,307
மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,306
ஜூன் 27 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 49,690 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28,823 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 730 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 20,136 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 5,989 மற்றும் 5,655 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 798 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.