Read in English
This Article is From Dec 12, 2018

‘காங்கிரஸுக்கு மோடியை வீழ்த்தும் திறன் இல்லை!’- ஒவைசி தாக்கு

அசாதூதின் ஒவைசி, ‘பிரதமர் மோடியை, வரும் 2019 லோக்சபா தேர்தலில், வீழ்த்தும் திறமை காங்கிரஸுக்கு இல்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா

பாஜக-வுக்கு மாற்று காங்கிரஸ் இல்லை, ஒவைசி

Hyderabad:

தெலங்கானா மாநில ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதூதின் ஒவைசி, ‘பிரதமர் மோடியை, வரும் 2019 லோக்சபா தேர்தலில், வீழ்த்தும் திறமை காங்கிரஸுக்கு இல்லை' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘பாஜக-வை வீழ்த்துவது என்பது, இன்னும் கடினமான விஷயமே. காங்கிரஸுக்கு அந்தத் திறமை இல்லை. 2019 லோக்சபா தேர்தலில், மோடி தலைமையிலான பாஜக-வை வீழ்த்த வேண்டுமானால், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும்' என்றார்.

ஒவைசி தெலங்கானாவில் கேசிஆர் வெற்றி குறித்து பேசுகையில், ‘தெலங்கானா மக்கள் சந்திரசேகர் ராவின் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இனி கேசிஆர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணியை செய்ய வேண்டும்.

கேசிஆர், தன்னை தெலங்கானாவுடன் சுருக்கிக் கொள்ளக் கூடாது. அவர் தேசிய அளவில் தன்னை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அவரின் ஆட்சி ஆதிகார முறை, நாட்டுக்கே நன்மை பயக்கும்.

Advertisement

கேசிஆரும் அதை உணர்ந்து தற்போது பேசி வருகிறார். அவரின் முடிவை நாங்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வோம். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் முன் வந்து நாட்டுக்குப் புதிய பார்வையையும், புதிய பொருளாதாரக் கொள்கையையும் தர வேண்டும். கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான திறன் கேசிஆரிடம் உள்ளது' என்று கூறினார்.

சந்திரபாபு நாயுடு குறித்து ஒவைசி பேசுகையில், ‘தேர்தல் முடிவுகளிலிருந்து சந்திரபாபு நாயுடு ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் அடுத்து ஆந்திர பிரதேசத்துக்கும் செல்வேன். அங்கு மொத்தம் இருக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதியில் நாயுடு, 2 இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார் என்று திட்டவட்டமாக கூறுகிறேன். மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்' என்று வறுத்தெடுத்தார்.

Advertisement

அவர் பாஜக குறித்து இறுதியாக பேசுகையில், ‘தெலங்கானா தேர்தலில், பாஜக-வின் முக்கியத் தலைவர்களே தோற்றுவிட்டனர். தெலங்கானா பாஜக தலைவரே, தோற்றுவிட்டார். இப்போது யோகி ஆதித்யநாத் என்ன சொல்வார். அமித்ஷா மற்றும் மோடி என்ன சொல்வார்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

 

Advertisement