हिंदी में पढ़ें Read in English
This Article is From May 17, 2019

புது வார்த்தை போட்டு மோடியை கேலி செய்த ராகுல்; ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் ‘அடடே’ விளக்கம்!

ராகுல் ட்வீட்டிய வார்த்தை, “Modilie”

Advertisement
இந்தியா Edited by

ராகுலின் ட்வீட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (Oxford Dictionary)

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை “Modilie” என்கின்ற வார்த்தை வைத்து கேலி செய்துள்ளார். இதற்கு விளக்கம் கொடுத்து அரசியல் ஆட்டத்துக்குள் மூக்கை நுழைத்துள்ளது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு. 

ஆகஸ்ஃபோர்டு அகராதியின் இணையதளத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல், “ஆங்கில மொழியில் ஒரு புதிய வார்த்தை இருக்கிறது தெரியுமா?” என்று பதிவிட்டுள்ளார். 
 

ராகுல் ட்வீட்டிய வார்த்தை, “Modilie”. அதாவது பிரதமர் மோடி தொடர்ந்து, ‘பொய் சொல்லி வருகிறார்' என்று கூறும் ரீதியில் அந்தப் பதிவு இருந்தது. 

ராகுலின் ட்வீட்டிற்கு விளக்கம் கொடுத்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, “இந்தப் படம் போலியானது என்றும், எந்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் Modilie என்கின்ற வார்த்தை இல்லை என்பதையும் உறுதிபட எங்களால் கூற முடியும்” என்று கூறியுள்ளது. 
 

இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் ராகுல், modilies.in என்கிற இணையதளம் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு, ராகுல் காந்தி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயரை “Jetlie” என மாற்றி விமர்சனம் செய்தார். இதற்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. 

Advertisement
Advertisement