This Article is From Oct 12, 2019

INX Media case: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு!

INX Media case: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

INX Media case: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனு!

ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

New Delhi:

டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். 

இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. 

(With inputs from IANS)  

.