This Article is From Nov 01, 2019

Watch: திகாரில் மீண்டும் அடைக்கப்பட்ட P Chidambaram, ‘பன்ச்’ கொடுத்து மத்திய அரசை கேலி!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் P Chidambaram கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Watch: திகாரில் மீண்டும் அடைக்கப்பட்ட P Chidambaram, ‘பன்ச்’ கொடுத்து மத்திய அரசை கேலி!

P Chidambaram சிறைக்குச் செல்லும் வழியில் , ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் (lawmakers from European Union), ஜம்மூ காஷ்மீருக்கு (kashmir) வந்தது குறித்தும் மத்திய அரசு பற்றியும் கேலி செய்து பேசியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram), இன்று, டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மீண்டும் திகார் (Tihar) சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குச் செல்லும் வழியில் சிதம்பரம், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் (lawmakers from European Union), ஜம்மூ காஷ்மீருக்கு (kashmir) வந்தது குறித்தும் மத்திய அரசு பற்றியும் கேலி செய்து பேசியுள்ளார். அது குறித்தான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

இன்னும் நாட்டின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளே ஜம்மூ காஷ்மீருக்கு அனுமதிக்கப்படாத நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியை கோபப்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ், தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், சிதம்பரமும் தன் பங்குக்கு கேலி செய்துள்ளார். 

சிறைக்குச் செல்லும் வழியில் பத்திரிகையாளர்களைப் பார்த்த சிதம்பரம், “ஐரோப்பிய எம்.பி.,க்கள் நமது நாடாளுமன்றத்துக்குக் கூட அழைக்கப்படலாம். அரசுக்கு ஆதரவாகக் கூட அவர்கள் பேசவைக்கப்படலாம். யாருக்குத் தெரியும்? நடக்க வாய்ப்புள்ளது,” என்று கேலி செய்தார். 
 

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 23 பிரதிநிகள் நேற்று காஷ்மீருக்குச் சென்றனர். அவர்கள் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீஸை சந்தித்து உரையாடினார்கள். முழு பாதுகாப்புடன் காஷ்மீரின் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சென்றனர். 

இன்று அமலாக்கத்துறையின் கஸ்டடி முடிந்த நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு நாளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. கடந்த திங்களன்று சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒட்டுமொத்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற சிதம்பரம் தாக்கல் செய்த மனு நவம்பர் 4 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் 16-ம்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி புகாரின் பேரில் கைது செய்து, திகார் சிறையில் இருந்து தங்களது கஸ்டடிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை கஸ்டடி முடிந்து திகாருக்கு சென்றுள்ளார் சிதம்பரம். 

.