Read in English
This Article is From Dec 12, 2019

குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்காதது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்

சிவசேனா மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவில் வாக்களிப்பதைத் தவிர்த்தது.

Advertisement
இந்தியா Edited by

குடியுரிமை மசோதா மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக பி சிதம்பரம் கூறியுள்ளார்.

New Delhi:

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கவில்லை என்பதில் காங்கிரஸ் மகிழ்ச்சியடைகிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய் கூறும்போது, கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு அரசு திருப்திகரமான பதில்களை அளிக்கவில்லை என்பதால் சிவசேனா மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவுக்கு வாக்களிப்பதைத் தவிர்த்தது என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த சிவசேனா, மாநிலங்களவையில் அதை எதிர்த்தது. மேலும், வரைவு சட்டம் என்பது மதம் அல்ல, மனிதநேயத்தின் அடிப்படையில் அது விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறியது. 

இந்நிலையில், சிவசேனா நிலைப்பாட்டின் மாற்றம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறும்போது, "சிவசேனா மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதில் நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறினார்.

Advertisement

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அங்கும் நிறைவேறியுள்ளது. 

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடாது. குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்றி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்று கூறியிருந்தார்.

 

Advertisement