ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
New Delhi: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத் துறை, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இன்று அவர் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக இருந்த தனது தந்தையான ப.சிதம்பரத்தின் செல்வாக்கை கார்த்தி, பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தது.