This Article is From Jan 13, 2019

'அகிலேஷும், மாயாவதியும் முடிவை மாற்றிக் கொள்வார்கள்'- ப.சிதம்பரம் நம்பிக்கை

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அகிலேஷும், மாயாவதியும் முடிவை மாற்றிக் கொள்வார்கள்'- ப.சிதம்பரம் நம்பிக்கை

உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி விரிவாக்கப்படும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

New Delhi:

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அமையும் கூட்டணியில் காங்கிரசை சேர்த்துக் கொள்ளப்போவதில்லை என்று சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இரு கட்சிகளும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தலா 38 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதில் காங்கிரசுக்கு இடமில்லை என்பதால் இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருக்கின்றன. அதிக தொகுதிகளை இரு கட்சிகளும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. இது இறுதி முடிவாக இருக்க முடியாது. அகிலேஷும், மாயாவதியும் முடிவை மாற்றிக் கொள்வார்கள். மிகப்பெரும் அளவில் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி அமையும். தேவை எற்பட்டால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

.