This Article is From Jan 11, 2020

“இந்தியர்கள் பாவம், எல்லாத்தையும் நம்பிடுவாங்க”- மத்திய அரசைப் போட்டுத்தாக்கும் P Chidambaram

P Chidambaram: “இந்தியர்களைப் போல ஒரு பாவப்பட்ட மக்களை நான் எங்கும் பார்த்ததில்லை."

“இந்தியர்கள் பாவம், எல்லாத்தையும் நம்பிடுவாங்க”- மத்திய அரசைப் போட்டுத்தாக்கும் P Chidambaram

"சில செய்தித்தாள்களில் எதாவது செய்தி வந்தால் அதை அப்படியே நம்பிவிடுகிறோம்,” P Chidambaram

Chennai:

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை எங்கேயும் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசு அதன் திட்டங்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை நாட்டின் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என்று கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். 

சென்னையில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிதம்பரம், “இந்தியர்களைப் போல ஒரு பாவப்பட்ட மக்களை நான் எங்கும் பார்த்ததில்லை. சில செய்தித்தாள்களில் எதாவது செய்தி வந்தால் அதை அப்படியே நம்பிவிடுகிறோம்,” என்று சொன்ன அவர், 

“இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது மற்றும் 99 சதவிகித குடும்பங்களுக்கு கழிவறை வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சொல்லும் அனைத்துப் புள்ளி விவரங்களையும் நாம் நம்பிவிடுகிறோம்,” என்றார்.

தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டமும் எப்படி செயல்முறைக்கு உகந்ததாக இல்லை என்பது பற்றி விவரித்த சிதம்பரம், “டெல்லியைச் சேர்ந்த ஒரு கார் ஓட்டுநரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. அந்த ஓட்டுநரிடம் நான், உங்கள் ஆயுஷ்மான் கார்டை எடுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் காட்டி வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று சொன்னேன். அவர் இது குறித்து ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஏறி இறங்கியிருக்கிறார். ஒருவருக்கும் இப்படியொரு திட்டம் இருப்பதாகவே தெரியவில்லையாம். ஆனால், ஆயுஷ்மான் திட்டம் இந்தியா முழுவதற்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எந்தவித நோய்க்கும் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பணமில்லாமல் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்புகிறோம். பாவம் நாம். செய்தித்தாள்களில் வரும் பல தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றன,” என்று முடித்தார். 

.