This Article is From Nov 01, 2019

P Chidambaram-க்கு AIIMS அறிக்கை கொடுத்த ஷாக்… நீதிமன்றம் காட்டிய அதிரடி!

INX Media Case - கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி P Chidambaram, டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

P Chidambaram-க்கு AIIMS அறிக்கை கொடுத்த ஷாக்… நீதிமன்றம் காட்டிய அதிரடி!

INX Media Case - ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து முழுமையாக பிணை கொடுக்க வேண்டி தாக்கல் செய்துள்ள P Chidambaram மனு வரும் நவம்பர் 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து (INX Media Case) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram) இடைக்கால பிணை (Interim Bail) கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ போர்டு-ஐ சேர்ந்த 7 பேர் மருத்துவர்கள் குழு, ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அளித்த அறிக்கையைத் தொடர்ந்து பிணை மனு நிராகரிப்பு உத்தரவைப் பிறப்பித்ததது நீதிமன்றம். மருத்துவர்கள் குழு அறிக்கையில், சிதம்பரத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருக்கு மினரல் வாட்டர் மற்றும் வீட்டுச் சாப்பாடு கொடுத்தால் போதும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதைக் கணக்கில் கொண்ட நீதிமன்றம், சிறையில் சிதம்பரத்துக்கு தூய்மையான சுற்றுப்புறம் மற்றும் கொசுக்கடியிலிருந்து நிவாரணம் கொடுக்கும்படி திகார் சிறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர். 

சிதம்பரத்தின் இடைக்கால பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து முழுமையாக பிணை கொடுக்க வேண்டி தாக்கல் செய்துள்ள அவரது மனு வரும் நவம்பர் 4 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி சிதம்பரம், டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வயிறு உபாதை காரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள தன்னை ஐதரபாத்துக்கு அனுப்பும்படியும் நீதிமன்றத்தில் முறையிட்டார் சிதம்பரம். 

இந்த பிணை மனு விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “எனது ஒரே கோரிக்கை, சிதம்பரத்தை சுகாதாரமான இடத்தில் வைத்திருக்க அனுமதியுங்கள். எய்ம்ஸ் மருத்துவர்கள் அது தேவையில்லை என்று நினைத்தார்கள் என்றால், அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பலாம்,” என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்துதான் நீதிமன்றம், எய்ம்ஸ் மருத்துவக் குழுவை அமைத்து, அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018 இல் வழக்குப்பதிவு செய்தது.

சிபிஐ வழக்கில் சிதம்பரத்துக்கு பிணை கிடைத்தபோதும், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், நீதிமன்றக் காவலில் இருக்கிறார். 
 

.