This Article is From Dec 07, 2019

Telangana Encounter: ‘நடந்தது உண்மையான என்கவுன்ட்டரா..?’- கேள்வியெழுப்பும் ப.சிதம்பரம்

Telangana: "என்ன நடந்திருந்தாலும் அது குறித்தான முறையான முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டும்"

Telangana Encounter: ‘நடந்தது உண்மையான என்கவுன்ட்டரா..?’- கேள்வியெழுப்பும் ப.சிதம்பரம்

"நடந்தது உண்மையான என்கவுன்ட்டரா அல்லது வேறு எதாவதா என்பது விசாரணை செய்வதன் மூலம்தான் தெரியவரும்"

Ranchi:

Telangana Encounter: தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். நேற்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இந்த என்கவுன்ட்டருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், ப.சிதம்பரம், “முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்,” எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் இது குறிதுதப் பேசுகையில், “என்ன நடந்தது என்பது குறித்த முழுத் தகவல் எனக்குத் தெரியாது. என்ன நடந்திருந்தாலும் அது குறித்தான முறையான முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டும்.

நடந்தது உண்மையான என்கவுன்ட்டரா அல்லது வேறு எதாவதா என்பது விசாரணை செய்வதன் மூலம்தான் தெரியவரும். ஒரு பொறுப்புள்ள நபராக, விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்வேன்,” என்றுள்ளார் சிதம்பரம். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு, சில வாரங்களுக்கு முன்னர் ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத் துறையின் வழக்கில் தொடர்ந்து அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம், அவருக்குப் பிணை கொடுத்து உத்தரவிட்டது. 106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் வெளியே வந்தார். அவர் வெளியான அடுத்த நாளே, நாடாளுமன்றத்துக்கு வந்தார். அப்போது சிதம்பரம், “நாடாளுமன்றத்தில் எனது குரலை இந்த அரசால் அடக்க முடியாது,” என்றார் தீர்க்கமாக. 


 

.