This Article is From Feb 08, 2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்!

ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே பலமுறை விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்!
New Delhi:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு இன்று ஆஜரானார். 

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு முடக்கினர்

இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே பலமுறை விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,  அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான சிதம்பரத்திடம் அதிகாரிகள்  விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

.