This Article is From Sep 03, 2018

"பா.ஜ.க ஆட்சியில் வாராக்கடன்கள் எத்தனை?" - ப.சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் தான் முறையின்றி வங்கிக் கடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்

New Delhi:

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் தான் முறையின்றி வங்கிக் கடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் 12 மிகப்பெரிய அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ரூ.1 லட்சம் கோடி கடனை திரும்ப மீட்க தேவையான பணிகளில் தான் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

 

 

அதற்கு தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், 2014-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட வங்கிகடன்களில் வாராக்கடன்கள் எத்தனை? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாராளுமன்றத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு மோடி பதலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய ஆட்சியில்தான் முறையற்ற வங்கிக்கடன்கள் அளிக்கப்பட்டதாக கூறும் மோடி, அவற்றை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

.