Read in English
This Article is From Jun 23, 2020

பிரதமரிடம் கேட்க துணிச்சல் உள்ளதா? ஜெ.பி.நட்டாவுக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

2010 மற்றும் 2013க்கு இடையில் அண்டை நாடு மேற்கொண்ட 600க்கும் மேற்பட்ட ஊடுருவல்களுக்கு தலைமை தாங்கினார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement
இந்தியா ,

பிரதமரிடம் கேட்க துணிச்சல் உள்ளதா? ஜெ.பி.நட்டாவுக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்!

Highlights

  • சீன ஊடுருவல்களை விளக்குமாறு பிரதமரிடம் கேட்கத் துணிச்சல் உள்ளதா
  • பிரதமரிடம் விளக்குமாறு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்ப வேண்டும்
  • அவருக்கு அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு துணிச்சல் கிடையாது
New Delhi:

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, 2015 முதல் 2264 சீன ஊடுருவல்களை விளக்குமாறு பிரதமரிடம் கேட்கத் துணிச்சல் உள்ளதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் எப்போதும் தனது வார்த்தைகளின் தாக்கம் அறிந்து கவனமாக பேச வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் லடாக் மோதல் குறித்து எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2010 முதல் 2013 வரை நடந்த 600 சீன ஊடுருவல் குறித்து விளக்குமாறு கேள்வி எழுப்பியிருந்தார். 

இந்நிலையில், ஜெ.பி.நட்டாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஆம் ஊடுருவல் இருந்தது. ஆனால், இந்திய எல்லைகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை, மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும், தயவு கூர்ந்து, 2015 முதல் நிகழ்ந்த 2264 சீன ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் விளக்குமாறு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்ப வேண்டும். அவருக்கு அந்த கேள்வியை கேட்கும் அளவுக்கு துணிச்சல் கிடையாது என்று சவாலாக கூறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், பிரதமராக மன்மோகன் சிங் இந்தியாவின் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் "தவறுதலாக ஒப்படைத்துவிட்டார்" என்றும், 2010 மற்றும் 2013க்கு இடையில் அண்டை நாடு மேற்கொண்ட 600க்கும் மேற்பட்ட ஊடுருவல்களுக்கு தலைமை தாங்கினார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

43,000 கி.மீ இந்தியப் பகுதியை சீனர்களிடம் ஒப்படைத்த, அதே கட்சியைச் சேர்ந்தவர் மன்மோகன் சிங். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த காலங்களில் ஒரு சண்டையும் இல்லாமல் மோசமான மூலோபாய மற்றும் பிராந்திய சரணடைதலைக் கொண்டனர். நேரம், மீண்டும் அவர் நமது படைகளை குறைத்து மதிப்பிடுகிறார் என்று விமர்சித்திருந்தார். 

Advertisement