New Delhi: பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்க, அதிகபடியான வரி விதிப்பே காரணம் என மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார், காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
இந்த விவகாராம் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
“ வரி விகிதங்களை குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை தானாக குறையும்” என அவர் பதிவிட்டிருக்கிறார். ஜி.எஸ்.டி கொண்டு வரப்ப்படாததற்கு மாநில அரசுகள் மீது கைகாட்டுவது மத்திய அரசின் போலியான குற்றச்சாட்டு. பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் 19 இருக்கின்றன என மத்திய அரசு மறந்துவிட்டு பேசுகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் மற்றும் டீசலை, ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனவும், அதையே காங்கிரஸ் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல்,டீசல் விலை திங்களன்று வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை 79.15 ரூபாயும், டீசல விலை 71.15 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நாட்டிலேயே மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 86.56 ரூபாயாக இருக்கிறது.