Read in English
This Article is From Oct 23, 2019

INX வழக்கு- அமலாக்கத்துறை பிடியிலிருந்து P Chidambaram விடுபடுவாரா? - பிணை மனுவின் பின்னணி!

INX Media case- சிபிஐ விசாரணை அமைப்பு தொடர்ந்திருந்த ஐ.என்.எக்ஸ் வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம், P Chidambaram-க்கு பிணை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
இந்தியா Edited by

INX Media case- ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையில் சிதம்பரத்திற்கு, சிபிஐ தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

New Delhi:

அமலாக்கத் துறை (ED) தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலிருந்து (INX Media Case) பிணை கொடுக்க வேண்டும் என்று சொல்லி, நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (P Chidambaram). 

ஐ.என்.எக்ஸ் வழக்கில் இருக்கும் பணமோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து வருகிறது அமலாக்கத் துறை. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரத்தை, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி கைது செய்தது அமலாக்கத் துறை. நாளை வரை அவரை காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி வாங்கியுள்ளது அமலாக்கத் துறை. 

இந்நிலையில் வழக்கிலிருந்து ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில், “வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்ற அனைவருக்கும் பிணை கொடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மிகப் பெரும் மதிப்பு வாய்ந்தவர் மனுதாரர். பொது வாழ்க்கையில் 40 ஆண்டு காலம் சேவையாற்றி வருபவர். அவர் மீது அரசியல் உள்நோக்கத்தோடுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரின் மாண்பையும் மதிப்பையும் குலைக்கும் வகையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், “விசாரணைக்காக எப்போதெல்லாம் அழைக்கப்பட்டாரோ அப்போதெல்லாம் எந்தவித சுணக்கமுமின்றி அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் மனுதாரர். அதேபோல அவருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனைகளிலும் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது உச்ச நீதிமன்றம். 

Advertisement

சிபிஐ விசாரணை அமைப்பு தொடர்ந்திருந்த ஐ.என்.எக்ஸ் வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம், சிதம்பரத்துக்கு பிணை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையில் சிதம்பரத்திற்கு, சிபிஐ தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்தனர். 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisement

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது.
 

Advertisement