This Article is From Jun 03, 2018

ப.சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு... விசாரணைக்காக சிபிஐ அழைப்பு!

இந்த வழக்கிற்காக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, திரு.கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்

ப.சிதம்பரத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு... விசாரணைக்காக சிபிஐ அழைப்பு!

ஹைலைட்ஸ்

  • முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை INX ஊடக வழக்கில், சிபிஐ விசாரிக்க உள்ளது
  • வெளிநாட்டு பங்குளுக்கான அனுமதி அளித்த வழக்கு விசாரணையில் உள்ளது
  • ஜூலை 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளது
New Delhi: ஜூன் 6 ஆம் தேதி அன்று, INX ஊடக வழக்கில், முன்னாள் தொழிற்சங்க அமைச்சர், ப.சிதம்பரம், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று, நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, திரு.ப.சிதம்பரத்தை ஜூலை 3 ஆம் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்யக்கூடாது என அறிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அன்று, மேக்சிஸ் ஏர்செல் மற்றும் INX ஊடக வழக்கில் இருந்து கைதாவதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

அதில் ஒரு வழக்கில், ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்ற விசாரணை வரும் வரை முன்னாள் அமைச்சரை கைது செய்ய கூடாது என அமலாக்க பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்த பிறகு, INX ஊடக வழக்கிற்காக தில்லி உயர்நீதி மன்றத்தை ப.சிதம்பரம் அணுகினார். இந்த வழக்கில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பீட்டர் மற்றும் இந்திராணி முக்கர்ஜீ நிறுவிய INX ஊடகத்திற்கு வெளிநாட்டு பங்கு முதலீட்டிற்கு அனுமதி அளித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கிற்காக, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி, திரு.கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். 2007 ஆம் ஆண்டு, INX ஊடகத்திற்கு வெளிநாட்டு பங்குகள் முதலீட்டிற்கு லஞ்சம் வாங்கிய புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு திரு.ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த ஆண்டு சிபிஐ விசாரணை மையம் வழக்கு தொடர்ந்தது.

INX ஊடக வழக்கில், 305 கோடி வெளிநாட்டு பங்குகளை முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அனுமதி வழங்க திரு.கார்த்தி சிதம்பரம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
.