This Article is From Sep 13, 2019

Chidambaram news: அடுத்தடுத்த கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம்… சிதம்பரத்தின் சிறைவாசம் நீள்கிறது!

கடந்த வியாழக் கிழமை, அமலாக்கத் துறை, ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணையின்போது, “சிதம்பரத்தை விசாரிப்பது அவசியம்” என்று தெரிவித்திருந்தது

Chidambaram news: அடுத்தடுத்த கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம்… சிதம்பரத்தின் சிறைவாசம் நீள்கிறது!

சித்மரம் தரப்பு வழக்கறிஞர், “அமலாக்கத் துறையின் ஒரே நோக்கம், சிதம்பரத்தை துன்பப்பட வைப்பதுதான்” என்று தெரிவித்தார். 

New Delhi:

அமலாக்கத் துறை, தனக்கு எதிராக தொடர்ந்திருந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case), அந்த அமைப்பிடம் சரணடையத் தயார் என்று முன்னாள் மத்திய நிதி ப.சிதம்பரம் (P Chidambaram) முறையிட்டதை, டெல்லி நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. நீதிமன்றத்தின் இந்த முடிவின் காரணமாக சிதம்பரம், தொடர்ந்து திகார் சிறையிலேயே நீதிமன்றக் காவலில் இருப்பார்.

கடந்த வியாழக் கிழமை, அமலாக்கத் துறை, ஐ.என்.எக்ஸ் வழக்கு விசாரணையின்போது, “சிதம்பரத்தை விசாரிப்பது அவசியம்” என்று தெரிவித்திருந்தது. ஆனால், இன்றைய விசாரணையின் போது அமலாக்கத் துறை தரப்போ, “தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் சிதம்பரத்தால் வழக்கை குலைக்கும் நோக்கிலான காரியங்களில் ஈடுபட முடியாது” என்றது. இதை எதிர்த்த சித்மரம் தரப்பு வழக்கறிஞர், “அமலாக்கத் துறையின் ஒரே நோக்கம், சிதம்பரத்தை துன்பப்பட வைப்பதுதான்” என்று தெரிவித்தார். 

சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல் வாதாடியபோது, “கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆம் தேதிகளில் சிதம்பரத்தின் வீட்டுக்கு வந்து அவரைக் கைது செய்யப் பார்த்தது அமலாக்கத் துறை. ஆனால், இப்போது விசாரணைக்கு அவர் தேவையில்லை என்கிறது. அவர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களின் குறிக்கோள்” என்றார். 

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், 14 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம், இரண்டு வாரங்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதான் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

(PTI தகவல்களுடன் எழுதப்பட்டது)

.