This Article is From Aug 16, 2019

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை; பாராட்டும் ப.சிதம்பரம்!

அந்த உரையில் இருக்கும் 3 அம்சங்களை வரவேற்று பாராட்டியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை; பாராட்டும் ப.சிதம்பரம்!

ஒரு முறை பயன்படுத்தி நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன- மோடி

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று டெல்லியின் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரை ஆற்றினார். அந்த உரையில் இருக்கும் 3 அம்சங்களை வரவேற்று பாராட்டியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

“சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 3 விஷயங்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். கட்டுப்பாடான குடும்பம் என்பது தேசப்பற்றின் ஒரு அங்கமே, பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

பிரதமரின் இரண்டாவது அறிவிப்பை நிதி அமைச்சரும், அவருடைய குழுவும் நன்றாக கேட்டிருப்பார்கள்ள் என்று நம்புகிறேன். 

முதல் மற்றும் மூன்றாவது அறிவிப்புகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்த இரு விஷயங்களை, உள்ளூர் அளவில் முன்னெடுத்துச் செல்ல நூற்றுக்கணக்கான தன்னார்வ அமைப்புகள் இருக்கின்றன” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

செங்கோட்டையில் நேற்று உரை ஆற்றிய பிரதமர் மோடி, “மக்களில் ஒரு பிரிவினர் ஒரு குழந்தையை இந்த உலகிற்குக் கொண்டு வருவதற்கு முன்னர், அதற்கு வேண்டியதைச் செய்ய முடியுமா என்பதை யோசிக்கிறார்கள். அந்த குழுந்தை விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற முடியுமா என்பதையும் பொருட்படுத்துகிறார்கள். அவர்கள் சிறிய குடும்பத்தினால் தேச பற்றை நிறுவுகின்றனர். அவர்களிடமிருந்து நாம் பாடம் கற்போம். இது குறித்து சமூக விழிப்புணர்வு அவசியம்” என்றார்.

தொடர்ந்து அவர், “பொருளாதாரத்தை உருவாக்குபவர்களும் தேசத்துக்குப் பெரும் தொண்டாற்றுகின்றனர். ஒரு முறை பயன்படுத்தி நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அது சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் இது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்” என்றும் பேசினார். 

.