This Article is From Jan 13, 2020

CAA விவகாரம்: பிரதமர் மோடிக்கு ‘நச்’ அட்வைஸ் கொடுத்த P Chidambaram!

Citizenship Amendment Act: இப்படிப்பட்ட சூழலில் இன்று பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் சந்தித்து, இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவாதிக்க உள்ளன. 

CAA விவகாரம்: பிரதமர் மோடிக்கு ‘நச்’ அட்வைஸ் கொடுத்த P Chidambaram!

சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

New Delhi:

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக இந்திய அளவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி, “இந்த புதிய சிஏஏ சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது,” என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சிதம்பரத்தின் அட்வைஸ் வந்துள்ளது. 

ஞாயிற்றுக் கிழமையன்று கொல்கத்தாவுக்குச் சென்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, “யாருடைய குடியுரிமையும் குடியுரிமைச் சட்டம் பறிக்காது. ஆனால், பலருக்குக் குடியுரிமையைக் கொடுக்கும். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தி உள்ளிட்டத் தலைவர்களின் கனவாகும்,” என்று உரையாற்றினார். 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப.சிதம்பரம், “பிரதமர் மோடி மேடையிலிருந்து அமைதியாக இருக்கும் மக்கள் முன்னிலையில் பேசுகிறார். ஆனால், எந்தவித கேள்விகளையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை.

பிரதமர் மோடி, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்கிறார். ஆனால், அதனுடன் என்ஆர்சி மற்றும் என்பிஆர் இணைந்தால், பலர் குடிமக்கள் அந்தஸ்தை இழப்பார்கள்,” என்று காட்டமாக கருத்து தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து, “இந்த விவகாரத்திற்கு ஒரு வழியில் மட்டும்தான் தீர்வு காண முடியும். பிரதமரின் 5 விமர்சகர்களை அழைத்து, தொலைக்காட்சியில் அவர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். மக்கள் அந்த விவாதத்தைப் பார்த்து ஒரு முடிவெடுக்கட்டும். இதற்கு பிரதமர் கண்டிப்பாக பதில் தருவார் என்று நம்புகிறேன்,” என்று அழுத்தமாக கூறியுள்ளார். 
 

முன்னதாக நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, “சிஏஏ பாரபட்சம் பார்ப்பதும் பிரித்தாலும் வகையிலும் இருக்கும் ஒரு சட்டம். எந்தொரு நாட்டுப்பற்றுடைய, சகிப்புத்தன்மையுடைய, மதச்சார்பற்ற இந்தியனுக்கும் இந்தச் சட்டத்தின் கோர முகம் தெரியும். இந்தியர்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்,” என்று ஆவேசத்துடன் பேசினார். 

சிஏஏவுடன் தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியும் இணைந்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மாறும் என்று இந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்தச் சட்டமானது பாகிஸ்தான், அப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருக்கும் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை கொடுக்க உதவும் என்கிறது மத்திய அரசு தரப்பு. 

இப்படிப்பட்ட சூழலில் இன்று பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் சந்தித்து, இந்தச் சட்டங்களுக்கு எதிராக விவாதிக்க உள்ளன. 
 

.