Read in English
This Article is From Aug 30, 2019

ஐ.என்.எக்ஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு சிபிஐ கஸ்டடி மீண்டும் நீட்டிக்கப்பட்டது!

திங்கட்கிழமை வரை, சிபிஐ கஸ்டடியிலேயே இருக்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார் ப.சிதம்பரம்.

Advertisement
இந்தியா Edited by

தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார்

New Delhi :

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு சிபிஐ கஸ்டடி வரும் திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சிறப்பு நீதிமன்றம்.

வரும் திங்கட்கிழமை வரை, சிபிஐ கஸ்டடியிலேயே இருக்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தார் ப.சிதம்பரம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபண்ணா அமர்விடம் சிதம்பரத்தின் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து செப்டம்பர் 2 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி, ‘ரிமாண்டு மனு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிதான் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளதால், அதுவரை சிதம்பரம் சிபிஐ கஸ்டடியிலேயே இருக்க நினைக்கிறார்' என்று தெரிவித்தனர்.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த மொத்த விஷயத்திலும் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார். “அரசு, இதுவரை என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன். அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை கைது செய்வது என்பது அவமானப்படுத்துவதற்கு செய்யப்படும் வேலையாகும்” என்று நீதிமன்றத்திலும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement