Read in English
This Article is From Mar 11, 2019

மோகன்லால், பிரபுதேவா, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷன் விருது வாங்கப்பட்டது. பிரபு தேவா உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.

Advertisement
இந்தியா Edited by

மோகன்லாலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருது வழங்கும் காட்சி

Highlights

  • பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களில் 56 பேர் விருது பெற்றனர்
  • நடிகர் காதர் கானுக்கு பத்ம விருது மறைவுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ளது
  • மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
New Delhi:

பிரபல நடிகர் மோகன்லால், நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா, பாடகரும் இசை அமைப்பாளருமான சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். மறைந்த நடிகர் காதர் கானுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 81 வயதான அவர் கடந்த ஆண்டு காலமானார். 
 

 

தமிழில் இருவர், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் பிரபல மலையாள நடிகருமான மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே கிரீடம், பரதம், வனபிரஸ்தம், ஜனதா கேரேஜ் மற்றும் புலி முருகன் ஆகிய படங்களில் நடித்தமைக்காக மோகன் லால் 5 தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். 

 

இதேபோன்று நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபுதேவா மிகவும் பிரபலமாக இருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் இந்தியில், ரவுடி ரத்தோர், வான்ட்டட், ஆக்சன் ஜாக்சன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

Advertisement

 

 

விருதைப் பெற்ற பின்னர் அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரபுதேவா, ''உங்கள் அன்புக்காக அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புதான் இந்த விருது எனக்கு கிடைக்க காரணம். ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் இந்த விருதை அர்ப்பணம் செய்கிறேன்'' என்று கூறியுள்ளார். 
 

பாடகரும், இசை அமைப்பாளருமான சங்கர் மகாதேவனுக்கு பத்ம ஸ்ரீ விருது வாங்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''எனது நண்பர்களான இஹ்சான் மற்றும் லாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கும் இந்த விருது கிடைத்ததாகத்தான் நான் கருதுகிறேன்'' என்று கூறியுள்ளார். 
இதேபோன்று நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

Advertisement

 

Advertisement