Read in English
This Article is From Jan 25, 2019

மோகன் லால், கவுதம் கம்பீர் உட்பட 112 பேர் பத்ம விருது பெறுகின்றனர்!

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்

Advertisement
இந்தியா

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன

New Delhi:

மறைந்த நடிகர் காதெர் கான், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மூத்த வழக்கறிஞர் ஃபூக்லா, மலையாள திரைப்பட நடிகர் மோகன் லால் உட்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புற கலைஞர் தீஜன் பாய், ஜிபவுத்தி தலைவர் இஸ்மாயில் ஓமர் குல்லா, தொழில் முனைவர் அனில்குமார் மணிபாய் நாயக் மற்றும் எழுத்தாளர் பால்வந்த் மோரேஷ்வர் புராண்டரே ஆகியோருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும். 

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அதேபோல சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் புபேஷ் ஹசரிங்கா ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோவிந்த் அறிவித்தார். 

Advertisement