இரு குழந்தைகளின் படிப்புக்கு பணத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். (Representational)
Chandigarh: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள கிராமாத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் லாட்டரியில் ஜாக்பாட்டை அடித்துள்ளார். ரூ. 2.5 கோடி லாட்டரி பரிசினை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலம் மா தீபாவளி -பூஜா பம்பர் 2019 லாட்டரிக்கான பரிசினை சஞ்சீவ் குமார் பெற்றுள்ளார்.
சஞ்சீவ் குமார் ஒரு ஓவியர், பிளம்பராகவும் எலக்ட்ரீஷியனாகவும் பணிபுரிகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரண்டு டிக்கெட்டுகளை சண்டிகர் பிஜிமரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலுள்ள லாட்டரி ஸ்டாலில் இருந்து ரூ. 1,000 கொடுத்து வாங்கியுள்ளார். இரண்டு லாட்டரிகளில் ஒன்று ஜாக்பாட் அடித்துள்ளது.
அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கும் குமாருக்கு இந்த ஜாக்பாட் நிதிச் சிக்கலை வெகுவாக தீர்க்கும் என்று நம்புகிறார். தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசியவர், இரு குழந்தைகளின் படிப்புக்கு பணத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகையை கோருவதற்கான ஆவணங்களை மாநில அரசின் பஞ்சாப் மாநில லாட்டரித் துறையிடம் சமர்பித்துள்ளார். லாட்டரித்துறை அதிகாரிகள் பரிசுத் தொகையை விரைவில் தருவதாக அவருக்கு உறுதியளித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.