ஜம்மு - காஷ்மீர் கடும் கட்டுபாடுகளின் கீழ் உள்ளது.
ஹைலைட்ஸ்
- Videos and messages - aimed at creating disorder - being circulated
- Men in "uniform of security forces" seen in these videos, said an offcial
- WhatsApp was widely used in J&K in the past to feed misinformation
New Delhi: பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வேலைகளில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை, ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், நாகாலாந்து வரையிலும் பிரச்சார வீடியோக்களையும் செய்திகளையும் பரப்பி வரும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறும்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் உடையில் மக்களை தாக்குகிறார்கள். பின் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள்.
தொடர்ந்து, காஷ்மீர் மக்களை இந்திய பாதுகாப்பு படையினர் தவறாக நடத்துவது போன்ற எண்ணத்தை மக்களுக்கு அளிக்கவே இது போன்ற வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த வீடியோக்களை நாகாலாந்து கிளர்ச்சிக் குழுக்களுக்கு அனுப்பி, அவர்களை நாகாலந்துக்கு தனி நாடு வேண்டும் என்று குரல் எழுப்ப தூண்டிவிடப்படுகின்றனர் என மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இதுபோன்ற காரணங்களாலே காஷ்மீரில் மீண்டும் இணைய சேவை துவங்கப்படாமல் இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற தனி நாகாலாந்து நாடு அமைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது.
இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை பார்வையிட சென்ற அரசியல் தலைவர்கள் பலரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் விதிகப்பட்ட கடும் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் இணைய சேவையை மீண்டும் துவங்கினால், தற்போது நாகாலந்தில் ஏற்படுத்துவது போல, பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு, காஷ்மீரிலும் கிளிர்ச்சி ஏற்பட முயற்சி செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணைய சேவை முடக்கப்படுவதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் அரசாங்கத்திற்கு எதிரான தவறான தகவல்களை வழங்க உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.