This Article is From Sep 02, 2019

‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ – இந்தியாவை எச்சரிக்கிறாரா இம்ரான் கான்?

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்று கூறும் இம்ரான் கான், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாடுகளும் பாதிப்பு அடையும் என்று தெரிவித்துள்ளார்.

‘அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம்’ – இந்தியாவை எச்சரிக்கிறாரா இம்ரான் கான்?

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காணப்படும் சூழலில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

New Delhi:

அணு ஆயுதத்தை முதலில் நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு விவகாரங்களில் பதற்றம் காணப்படும் சூழலில் அவரது கருத்து வெளி வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரை பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப்போர் செய்து வந்தது. அங்குள்ள தீவிரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டிருந்தது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது என்பது பாகிஸ்தானுக்கு விழுந்த பெரும் இடியாக பார்க்கப்படுகிறது.

இதனால்தான் சர்வதேச அமைப்புகளை நாடி, காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. இருப்பினும் அதற்கு சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாடுகளும் ஆதரவு அளிக்கவில்லை.

இந்த நிலையில் லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். இந்த இரு நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டால் அதனால் சர்வதேச நாடுகளும் பாதிப்பு அடையும். நாங்கள் எப்போதும் முதலில் அணு ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். கடந்த மாதம் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா எப்போதும் முதலில் அணு ஆயுதத்தை எடுக்காது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது. இது எதிர்காலத்தில் சூழலைப் பொறுத்து மாறலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

.